search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் விஜய்"

    • 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந்தேதி வெளியாகும்
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும்

    பிரபல நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.

    இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.புதுச்சேரி, கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடந்தது.





    இப்படத்தின் முதல் சிங்கிள் 'விசில் போடு' பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள், அதிக 'லைக்', பார்வைகள் சாதனை படைத்தது.

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 'கோட்' படத்தின் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 - ந்தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.




    மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

    கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்

    மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.




    இந்நிலையில் திரிஷாவுக்கு பதில் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
    • விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • விஜயகாந்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதை உண்டு.
    • நடிகர் விஜய் இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்திப்பார் என கூறப்படுகிறது.

    ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.




    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

    மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றுள்ளார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அறிவித்தது.




    இந்நிலையில், மறைந்த நடிகர் விஜய்காந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் 'கோட்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.

    இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :-

    "இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் 'கோட் ' படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சி அமைப்பது குறித்து அனுமதி கேட்டு எங்கள் வீட்டிற்கு 5 அல்லது 6 முறை வந்தார். எனது மகன் சண்முகபாண்டியனிடமும் அவர் பேசினார். நடிகர் விஜய்யும் தேர்தலுக்கு பிறகு என்னை சந்திப்பதாக கூறினார்.




    விஜயகாந்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதை உண்டு. அவரது இயக்கத்தில் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல், வெங்கட்பிரவுவை சிறு வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். அதனால் இதற்கு சம்மதம் தெரிவிக்க உள்ளேன்" என்றார்.

    இந்நிலையில் வருகிற தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜய் இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்திப்பார் என  கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் லாரன்சை கோவில் வாயிலில் நின்று சோபா வரவேற்றார்.
    • கோவிலில் இருந்தபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னை கொரட்டூரில் புதிதாக சாய் பாபா கோவில் கட்டியுள்ளார்.

    இந்த கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் மற்றும் ஷோபா சாமி தரிசனம் செய்யும் புகைப்படமும், கும்பாபிஷேகம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், நடிகர் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் நடிகர் லாரன்ஸ் இன்று வருகை தந்துள்ளார். நடிகர் லாரன்சை கோவில் வாயிலில் வரவேற்ற சோபாவின் காலி விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

    பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் கோவில் முழுக்க சுற்றி சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது, ஷோபா உடன் இருந்தார். கோவிலில் இருந்தபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

    சாமி தரிசனம் செய்த நடிகர் லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " அனைவருக்கும் வணக்கம், இன்று நண்பன் விஜயின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என் ராகவேந்திரர் சுவாமி கோவிலை கட்டியபோது, எங்கள் கோவிலில் ஒரு பாடலை பாடி, தன் இருப்பை எங்களுக்கு அருளினார்.

    இன்று அவளுடன் அவர்களின் கோவிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கோவிலை கட்டிய நண்பன் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நான் தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். அனைவரும் கோவிலு" என்றார்.

    • சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
    • சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார்.

    'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்தது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட இருந்தது. இதற்கான 'ஷூட்டிங்' லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டார்.




    மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார். அந்த குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடினார்.இந்த வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்

    ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது.

    இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றார்.அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.

    இநிலையில் தற்போது விஜய்யின் 'கோட்' படப்பிடிப்புகேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அசத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.




     

    இந்நிலையில் விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

    மேலும் அந்த குழந்தையிடம் 'அங்கிளுக்கு' ஒரு 'உம்மா' கொடுங்க என நடிகர் விஜய் கேட்பது போன்ற காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து உள்ளது.

    கேரள குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிய போது அந்த குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா ஒன்னு கொடு" என சொன்னதும் அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது.
    • விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார்.

    பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 69-வது படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

    விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இதனால் அவர் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

    விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது. டிவிவி தனய்யா தனது தயாரிப்பு பேனரான டிவிவி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்த படத்தை இயக்க பல இயக்குநர்கள் போட்டிப்போட்டு கொண்டுள்ளனர். இதில் இயக்குநர்கள் எச்.வினோத், காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகளவில் உள்ளது.

    • சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என வதந்தி.
    • அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே விஜய் மக்களை சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என பரவி வந்த நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்.

    யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொது மக்களும் நம்ப வேண்டாம்.

    கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பொதுமக்கள் சந்திப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
    • புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிகளாக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் தலைவர் அவர்களின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.

    நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.

    ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும். சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    நமது கழகத் தலைவர் அவர்களின் உந்தரவின் பேரில், மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    • நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
    • தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.

    சென்னை:

    விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.

    ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
    • நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.

    நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.

    ×